தேவையான பொருட்கள் :
- சிக்கன் லெக் பீஸ் - 4
- தயிர் - அரை கப்
- மிளகாய் தூள் - 1ஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- சாட் மசாலா - 1/4 ஸ்பூன
- ஃபுட் கலர் - சிறிது
- இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- எண்ணெய் -2 ஸ்பூன்
- லெமன் - 1
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா ,மிளகு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் , 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து அதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை பிரட்டி ஊற விடவும்.
- சிக்கனை மசாலாவில் 2 மணி நேரம் ஊறவிடவும்.
- 220 C’ ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும். 10 நிமிடத்துக்கு ஒரு முறை திருப்பி விடவும். நன்கு வெந்ததும் 2 நிமிடத்திற்கு அவனில் பராயில் வைத்து கிரிஸ்பியாக்கவும்.
- பின் சிக்கன் மேல் லெமன் சாரை பிழிந்து பரிமாறவும்.