தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- தயிர் - 1 கப்
- சோள மாவு - 5 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 3/4 ஸ்பூன்
- மிளகு தூள் - 3/4 ஸ்பூன்
- முட்டை - 1
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- கேசரி கலர் - சிறிது
- எண்ணெய் - 2 கப்
- முதலில் சிக்கனை நன்கு நீரில் சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு, அத்துடன் தயிர்,சோள மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள்,கேசரி கலர்,எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டிக கொள்ள வேண்டும்.
- அந்த கலவையில் தண்ணீர் அதிகம் இருந்தால், குறைப்பதற்கு அத்துடன் சோளமாவு சேர்த்துக் கொள்ளலாம்.
- பின் 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 8-10 நிமிடம் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் காரமான சிக்கன் ப்ரை ரெடி!!!