தேவையான பொருட்கள்:
- ஓட்ஸ் -2 கப்
- வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
- எண்ணெய் -2 ஸ்பூன்
- கடுகு-1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு-1 ஸ்பூன்
- கடலைபருப்பு-1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்-2
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- காரட்-1
- பீன்ஸ்-5
- பச்சைபட்டாணி-1/4 கப்
- உப்பு-1/2 ஸ்பூன்
- தண்ணீர்-1 1/4கப்
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு சேர்த்து பொரிந்ததும், அதில் கருவேப்பிலை,நீளமாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதில் பொடியாக நறுக்கிய காரட்,பீன்ஸ்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் சிறிது மஞ்சள் தூள்,ஓட்ஸ் உப்பு சேர்த்து நன்கு கிளறி 1 1/4 கப் தண்ணீர் ஊற்றி, தீயை சிறிதில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
- வெந்ததும் கொத்தமல்லி தூவி கிளறினால் ஓட்ஸ் உப்புமா ரெடி.