தேவையான பொருட்கள் :
- பொன்னாங்கனி கீரை - 1 கட்டு
- வெங்காயம் - 1
- தக்காளி-1
- பூண்டு - 8 பல்
- சிறுபருப்பு - 1 கப்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் -1 ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிது
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு- 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
செய்முறை :
- சிறுபருப்பை கூகேரில் வைத்து ஒரு விசில் விடவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம் பருப்பு , சீரகம் போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் பூண்டை தட்டி போட்டு தக்காளி நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொத்திக்கவிடவும்.
- 5 நிமிடம் பின் வேகவைத்த சிறுபருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பொன்னாங்கனி கீரை கூட்டு ரெடி.
0 comments:
Post a Comment