தேவையான பொருட்கள்:
- சிக்கன் -1/4 கிலோ
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- பட்டர் - 2 ஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
- தக்காளி - 2
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- சீரக தூள் - 1 ஸ்பூன்
- மிளகு தூள் -1/2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- கசூரி மேத்தி - 1 ஸ்பூன்
- பூண்டு - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி -சிறிது
- உப்பு - 3/4 ஸ்பூன்
செய்முறை:
- பேனில் எண்ணெயும்,பட்டரும் சேர்த்து சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு சிவக்கும் வரை வதக்கவும். சிவந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
- அதே பேனில் மீதமுள்ள எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தனியா தூள், சீரக தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் கலந்து வைத்துள்ள மசாலாவில் பாதியை இதில் சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து,எண்ணெய் பிரிந்து வந்ததும் வதக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகள், மீதமுள்ள கலந்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- ஐந்து நிமிடத்திற்கு பிறகு கசூரி மேத்தியை சேர்க்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து கிளறவும். மூடி போட்டு குறைந்த தீயில் வேக விடவும்.
- சிக்கன் வெந்ததும் நன்கு வறுத்து எடுக்கவும். பின் அதில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
0 comments:
Post a Comment