skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள் :
- சிக்கன் - 250 கிராம்
- வெங்காயம் - 2
- இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- தயிர் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 2 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனிய தூள் ,உப்பு போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கருவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- அதில் சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்.
- சிக்கன் மூடிவைத்து சமைக்கும் பொழுது அதில் இருந்து வரும் தண்ணீருடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- கொத்தமல்லி தூவி சூடான சாதம், சப்பாத்தி, தோசையுடன்பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :
கோழி - அரை கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 3ஸ்பூன்
தனியா பொடி - 4ஸ்பூன்
அரைக்க தேவையானவை :
மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - 1
உப்பு - 11/2 ஸ்பூன்
தாளிக்க தேவையானவை :
நல்லெண்ணெய் - 4ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 1
அன்னாசிப்பூ - 2
சோம்பு - 1/2ஸ்பூன்
வெந்தயம் - 1/2ஸ்பூன்
செய்முறை :
- ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து கோழியுடன் பிசறவும்.
- கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.
- வதங்கியதும் மிளகாய்ப்பொடி, தனியா பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.
தேவையான பொருட்கள் :
- சிக்கன் - 1/2 கிலோ
- மிளகாய்ப்பொடி - 2 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- முட்டையின் வெள்ளைக்கரு - 1
- சோயா சாஸ் - 1/4 ஸ்பூன்
- கார்ன் ஃப்ளார் - 2 ஸ்பூன்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- உப்பு -2 ஸ்பூன்
- கேசரி கலர் பவுடர் - சிறிது
- தயிர் - 1 ஸ்பூன்
செய்முறை:
- சிக்கன்எலுப்பில்லாமல் அல்லது எல்லும்புடன் சிக்கன் 65 செய்யலாம்.
- கொடுத்துள்ளவற்றை சிக்கன்ல்பிசறி ஃப்ரிட்ஜில் மூன்று அல்லது நாலு மணிநேரம் ஊறவைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு மீடியம் தீயில் பொரித்து எண்ணெய்யை நன்கு வடித்து விடவும்.