Pages

செட்டிநாட்டு கோழிக்குழம்பு


தேவையான பொருட்கள் :     

கோழி - அரை கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 3ஸ்பூன்
தனியா பொடி - 4ஸ்பூன்

அரைக்க தேவையானவை :

மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - 1
உப்பு - 11/2 ஸ்பூன்

தாளிக்க தேவையானவை :

நல்லெண்ணெய் - 4ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 1
அன்னாசிப்பூ - 2
சோம்பு - 1/2ஸ்பூன்
வெந்தயம் - 1/2ஸ்பூன்

செய்முறை :

  1. ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து கோழியுடன் பிசறவும்.
  2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.
  3. வதங்கியதும் மிளகாய்ப்பொடி, தனியா பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.

0 comments:

Post a Comment