தேவையான பொருட்கள்:
- காலிஃப்ளவர் - 1
- மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
- உப்பு - 1ஸ்பூன்
- கார்ன்மாவு - 4 ஸ்பூன்
- மைதா - 2 ஸ்பூன்
- அரிசிமாவு - 2ஸ்பூன்
- கேசரிகலர் - 1 பின்ச்
- எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
- காலிப்ளவர் சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
- அகலமான பாத்திரத்தில் நீர் விட்டு நன்கு கொதி வந்ததும் காலிஃப்ளவர், உப்பு சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் மூடி வைக்கவும். (உடனே அடுப்பை அணைத்து விடவும். நன்கு வெந்து விட்டால் க்ரிஸ்பியாக வராது).
- வடிதட்டில் நீர் வடிய விடவும். பின் எல்லா மாவையும், மிளகாய் தூள், உப்பு, கேசரி கலர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவைப்போல கலந்துகொளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சூடேறியதும் காலிஃப்ளவரை பஜ்ஜி கலவையில் போட்டுஎடுத்து காலிப்ளவரை மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
0 comments:
Post a Comment