தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி - 2 கப்
- வெங்காயம் - 1
- பூண்டு - 3
- இஞ்சி - சிறிது
- முட்டகோஸ் - 1/2 கப்
- கேரட் -1/2 கப்
- பீன்ஸ் -1/2 கப்
- குடைமிளகாய் -1/2 கப்
- பச்சைபட்டாணி - 1/2 கப்
- பச்சைமிளகாய் - 3
- சோயா சாஸ் - 1 ஸ்பூன்
- சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 3ஸ்பூன்
- உப்பு - 1ஸ்பூன்
- மிளகுதூள் -1/2 ஸ்பூன்
- வெங்காயதாள் - சிறிது
செய்முறை :
- பாஸ்மதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து வடித்துகொள்ளவும்.
- காய்களை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் உற்றி சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.
- அதில் பொடியாக நறுக்கிய காய்களை போட்டு வதக்கவும். பாதி வெந்ததும்சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் பாஸ்மதி சாதத்தை சேர்த்து கிளறவும். மிளகு தூள் தூவி நன்கு கிளறவும்.
- வெங்காய தாள் தூவி பரிமாறவும்.
1 comments:
noodles
Post a Comment