- பாஸ்மதிஅரிசி - 2 கப்
- இறால் - 11/2கப்
- தக்காளி - 1
- வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
- தனியாதூள் - 1 ஸ்பூன்
- பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- நெய் -2 ஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 2
- பிரிஞ்சிஇலை - 2
- ஏலக்காய் - 2
- உப்பு - 2 ஸ்பூன்
- புதினா -சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- கருவேப்பிலை - சிறிது
செய்முறை :
- பாத்திரத்தில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சிஇலை போட்டு கிளறவும்.
- பொரிந்ததும் கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கவும், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், பிரியாணி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
- அதில் இறால் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் உற்றி வேக விடவும்.
- வெந்து எண்ணெய் மேலே வந்ததும் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டுதட்டை வைத்து மூடி மேலே கனமான பொருளை வைத்து தம்மில் வைக்கவும்.
- 20நிமிடம் களித்து நெய் மேலே உற்றி கிளறி பரிமாறவும். சுவையான இறால் பிரியாணி ரெடி.
0 comments:
Post a Comment