தேவையான பொருட்கள்:
- பிரட்- 6 துண்டு
- ரவை-1 கப்
- தயிர்-1 கப்
- வெங்காயம்-1
- பச்சை மிளகாய்-4
- காரட்-1
- கொடைமிளகாய்-1
- உப்பு-3/4 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
- எண்ணெய் -3 ஸ்பூன்
- பாத்திரத்தில் ரவை,தயிர் சேர்த்து நன்கு கிளறி 1 மணிநேரம் மூடிவைக்கவும்.
- பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,துருவிய காரட்,துருவிய கொடைமிளகாய்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பில் ஒரு தவாவை வைத்து சூடானதும் ஒரு பிரட் துண்டை எடுத்து அதில் ரெடி பண்ணி வைத்துள்ள பேஸ்டை ஒரு ஸ்பூனால் இருபக்கமும் தடவி தவாவில் சப்பாத்தி போல வேகவைத்து எடுக்கவும்.
- உதாப்பம் வேகும் போது சிறிது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுத்தால் பிரட் உதாப்பம் ரெடி.
0 comments:
Post a Comment