தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு - 2
- பச்சை பட்டாணி - 1/2 கப்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- வெங்காயம்-1
- சீரகம்- 1/4 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- மைதா - 2 கப்
- எண்ணெய் - 3 கப்
- தண்ணீர் - 2 கப்
- ஒரு பெரிய பௌலில் மைதா, 1/4 ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதனை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊறவிட வேண்டும்.
- பின்னர் ஒரு பௌலில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி போட்டு, நன்கு ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் நீளமாக வேட்டிவைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு கிளறவும்.
- ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி,அதை வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும். பின் அதை அரைவட்டமாக வெட்டி ,அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சமோசாக்களை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- சுவையான வெஜிடேபிள் சமோசா ரெடி.தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment