தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் - 2
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- கடுகு - சிறிது
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- மல்லித் தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
- கூகேரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் நறுக்கிய கத்தரிக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனிய தூள்,உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.
- கூக்கரை திறந்து தண்ணீரை வடித்துவிட்டு கத்தரிக்காயை நன்கு மசித்துவிட்டு வடித்த தண்ணீரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
- கத்திரிக்காய் சட்னி ரெடி .கொத்தமல்லி தூவி பரிமாறவும். இட்லி,தோசையுடன் நன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment