தேவையான பொருட்கள்:
- தக்காளி - 3
- காரட் -1
- பீட்ரூட் - 1 சிறிய துண்டு
- பூண்டு - 3 பல்
- இஞ்சி - சிறியது
- கொத்தமல்லி காம்பு - 4 துண்டு
- பட்டை - 1
- கிராம்பு - 2
- பிரியாணி இலை - 1
- கார்ன் மாவு - 1 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- மிளகு - 10
- பட்டர் - 1/2 ஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்ஸ்
- பிரட் - 2
செய்முறை:
- பிரஷர் கூகேரில் தக்காளி,நறுக்கிய காரட், பீட்ரூட்,பட்டை,கிராம்பு, பிரியாணி இலை, மிளகு, கொத்தமல்லி காம்பு, இஞ்சி,பூண்டு, தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
- பின் தக்காளியின் தோலை எடுத்துவிடவும்.
- பட்டை,கிராம்பு,பிரியாணி இலையை நீக்கிவிட்டு,மீதமுள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த சாருடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 2 நிமிடம் கொதித்ததும் கார்ன் மாவை தண்ணீரில் கட்டிபடாமல் கரைத்து சூப்புடன் சேர்க்கவும்.
- சிறு தீயில் வைத்து 4 நிமிடம் கொதிக்க விட்டு உப்பு,பட்டர் சேர்த்து கிளறி பிரட் துண்டுகளை பொரித்து மேலே போட்டு பரிமாறவும்.
0 comments:
Post a Comment