தேவையான பொருட்கள்:
இதே முறையில் electric ரைஸ் கூகேரில் செய்யலாம்.
- பாஸ்மதி அரிசி-1 கப்
- வெங்காயம்-1
- பச்சைமிளகாய்-4
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
- புதினா -சிறிது
- கொத்தமல்லி-சிறிது
- பட்டை -2
- கிராம்பு-2
- பிரியாணி இலை -2
- ஏலக்காய்-2
- உப்பு-3/4 ஸ்பூன்
- நெய்-4 ஸ்பூன்
- தேங்காய் பால் - 2 கப்
- கரம் மசாலா-1/2 ஸ்பூன்
- பாஸ்மதி அரிசி அரைமணி நேரம் ஊறவைக்கவும் , பின் கூக்கேரில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை போட்டு பொரிந்ததும் மெலிதாக வெட்டிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் கரம்மசாலா,உப்பு சேர்த்து வதக்கவும்.
- அதில் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து 1 நிமிடம் வதக்கி, 2 கப் தேங்காய் பால் சேர்த்து கூகேரை மூடி 2 விசில் விடவும்.
- ஸ்பெஷல் தேங்காய் பால் சாதம் ரெடி. சிக்கன் கிரேவி ,குருமா வுடன் பரிமாறவும்.
இதே முறையில் electric ரைஸ் கூகேரில் செய்யலாம்.
0 comments:
Post a Comment