தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய்- 6
- வெங்காயம் - 1
- இஞ்சி - சிறிது
- பூண்டு - 5 பல்
- க.மிளகாய் - 5
- சோம்பு - 1 ஸ்பூன்
- சீரகம்-1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல்-3 ஸ்பூன்
- கசகசா- 1/2 ஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 2
- எண்ணெய் - 5 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உப்பு-1 ஸ்பூன்
செய்முறை:
- வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாயை எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
- அத்துடன் சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- கத்தரிக்காயை சுத்தம் செய்து மேலும் கீழும் சிறிது இடம் விட்டு கீறி அதில் அரைத்த விழுதை வைக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,கத்தரிக்காயை போட்டு வதக்கி எடுத்தால் ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெடி.
0 comments:
Post a Comment