தேவையான பொருட்கள் :
- கோதுமைமாவு - 1/2 கப்
- சர்க்கரை - 1 கப்
- தண்ணீர் -2 கப்
- நெய் - 5 ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
- முந்திரி பருப்பு - 5
- கேசரி கலர் பொடி - சிறிது
செய்முறை :
- கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு சப்பாத்தி மாவை போல பிசைந்து கொள்ளவும்.
- பின் அதை சிறிது சூடான தண்ணீரில் போட்டு 5-7 மணி நேரம் ஊறவிடவும்.
- கோதுமை கலவையை கலக்கி வடிதட்டில் ஊற்றி திப்பியை எடுத்து விடவும்.
- Nonstick பாத்திரத்தில் சக்கரை, 1 கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும்.
- கோதுமை கலவையின் மேல் தெளிந்து இருக்கும் தண்ணீரை முடிந்தவரை எடுத்து விடவும்.
- சக்கரை பாகு போல வந்ததும் கேசரி கலர்,கலந்து வைத்த கோதுமை கலவையை சேர்த்து கிளறவும்.
- பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
- நெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்த முந்தரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறினால் கோதுமை அல்வா ரெடி.
1 comments:
செய்முறை தெளிவாக இல்லை. இன்னும் விளக்கம் தேவைபடுகிறது.
Post a Comment