Pages

காரட் சாதம்

தேவையான பொருட்கள்:


  1. காரட் -5
  2. பாஸ்மதி அரிசி-1 கப் 
  3. பட்டை-1
  4. கிராம்பு-3
  5. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள்-3/4 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  8. வெங்காயம் -1
  9. உப்பு-1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
  1. பாஸ்மதி அரிசியை நன்கு ஒட்டாத படி சாதமாக வடித்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு சேர்த்து வதக்கவும் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் துருவிய காரட் சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் அதில் உப்பு , கரம் மசாலா, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.(அடுப்பை மிதமான தீயில் வைத்துகொள்ளவும்)
  5. பின் அதில் வடித்த சாதத்தை சேர்த்து கிளறினால் காரட் சாதம் ரெடி.

0 comments:

Post a Comment