தேவையான பொருட்கள்:
- பன்னீர் - 1 கப்
- வெங்காயம்-1
- கொடமிளகாய் - 1
- இஞ்சி-சிறிது
- பூண்டு- 2 பல்
- மிளகு-1 ஸ்பூன்
- தனியா - 1 ஸ்பூன்
- மிளகாய்-3
- பட்டை-1
- கிராம்பு-3
- ஏலக்காய்-2
- சீரகம்-1/2 ஸ்பூன்
- சோம்பு-1/2 ஸ்பூன்
- உப்பு-1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- எண்ணெய் -5 ஸ்பூன்
செய்முறை:
- கடாயில் மிளகு,தனியா,மிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம், சோம்பு வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- தவாவில் 2 ஸ்பூன் எண்ணெய் உற்றி சிறிய பன்னீர் துண்டுகளை போட்டு பொரித்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சதுர வடிவில் வெட்டிவைத்த வெங்காயம்,கொடமிளகாய் சேர்த்து வதக்கவும்,பின் அதில் துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் அரைத்து வாய்த்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அதில் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
- பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி பரிமாறவும்.
0 comments:
Post a Comment