தேவையான பொருட்கள்:
செய்முறை:
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- தக்காளி - 2
- வெங்காயம் - 1
- கடலைபருப்பு - 2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 3 பல்
- காய்ந்த மிளகாய் - 3
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வருக்க வேண்டும். பின் அதில் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும்
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து விடவும்.
- நன்கு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
- பின் கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றவும்.சுவையான தேங்காய் தக்காளி சட்னி தயார்.
0 comments:
Post a Comment