Pages

பேபி உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்: 

  1. பேபி உருளைக்கிழங்கு - 8
  2. பச்சை மிளகாய் - 2 
  3. வெங்காயம் - 2 
  4. தக்காளி - 1 
  5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  7. மல்லி தூள் - 1 ஸ்பூன் 
  8. கரம் மசாலா - 1 1/4 ஸ்பூன்  
  9. சீரகம் - 1/2 ஸ்பூன் 
  10. உப்பு -1 ஸ்பூன்  
  11. எண்ணெய் - 4 ஸ்பூன் 
செய்முறை: 

  1. முதலில் பேபி உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துகொள்ளவும்  
  2. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கைப் போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  3. பின் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 
  4. உருளைக்கிழங்கானது நன்கு பொன்னிறமானதும், தீயை குறைத்து, உருளைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் 
  5. பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் கருவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காயத்தைப் முதலில் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். 
  6. பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கி, அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மீண்டும் 3-4 நிமிடம் கிளற வேண்டும். 
  7. பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, பொரித்து வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கை சேர்த்து, மசாலாக்கள் அனைத்தும் உருளைக்கிழங்கில் சேரும் வரை நன்கு கிளறி இறக்கினால், சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.

0 comments:

Post a Comment