தேவையான பொருட்கள் :
- துருவிய பீட்ரூட் - 1 கப்
- பால் - 2 கப்
- சர்க்கரை - 1/2 கப்
- நெய் - 4 ஸ்பூன்
- முந்திரி - 8
- ஏலக்காய் - 2
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் பாதி அளவு பால் விட்டு காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடவும்.
- பீட்ரூட் வெந்ததும் பால் வற்றும் வரை கிளறவும்.
- பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- அல்வா பதம் வர ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
- பின் முந்தரி பருப்பு வறுத்து அதனுடன் சேர்க்கவும்.
- ஏலக்காய் பொடி செய்து சேர்த்து கிளறி பரிமாறவும்.
0 comments:
Post a Comment