தேவையான பொருட்கள்:
- உருளைகிழங்கு -2
- கடுகு-1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு-1/4 ஸ்பூன்
- பூண்டு-3 பல்
- கருவேப்பிலை-சிறிது
- எண்ணெய் -3 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
- தனியாதூள் -1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
செய்முறை:
- உருளைகிழங்கை தோல் சீவி சின்ன சின்ன சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் தட்டிவைத்த பூண்டு,வெட்டிவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- பாதி வதங்கியதும் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள் சேர்த்து நன்கு கிளறி சிறு தீயில்வைத்து மூடிபோட்டு வேகவிடவும்.
- நன்கு வெந்ததும் கிளறி பரிமாறவும். சுவையான உருளைகிழங்கு வறுவல் ரெடி.
0 comments:
Post a Comment