தேவையான பொருட்கள்:
- சிக்கன்-250 கிராம்
- கொத்தமல்லி-1 பௌல்
- மிளகு-2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
- வெங்காயம்-1
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
- உப்பு-1 ஸ்பூன்
- எண்ணெய் -4 ஸ்பூன்
செய்முறை:
- கொத்தமல்லி, மிளகு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்த கொத்தமல்லி,மிளகு மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- வதங்கியதும் வெங்காயத்தை அரைத்து விழுதை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
- வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் வதக்கி சிக்கன் சேர்த்து வதக்கவும்.
- சிக்கன் வதக்கி மூடிபோட்டு வேகவிடவும்.சிக்கனில் வரும் தண்ணீரில் சிக்கன் வெந்துவிடும்.
- சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் மூடிதிறந்து நன்கு கிளறவும்.
- மசாலாவில் உள்ள தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்துவந்ததும் கொத்தமல்லி இலை தூவி கிளறினால் சுவையான பெப்பர் சிக்கன் ரெடி ,பிரியாணியுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment