தேவையான பொருட்கள்:
- முட்டை - 3
- வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லி தூள் - 3/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- தேங்காய் பால் - 2 கப்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு-1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை-சிறிது
- உப்பு- 3/4 ஸ்பூன்
- முட்டை வேகவைத்து பாதியாக வெட்டி வைத்து கொள்ளவும்.
- கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,நீளவாக்கில் மெலிசாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் மிளகாய்த்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- மசாலா நன்கு கொதித்ததும், தேங்காய்பால் சேர்த்து கொதிவர ஆரம்பித்ததும் முட்டை போட்டு மசாலாவை இறக்கவும்.
- கொத்தமல்லி இலை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.
2 comments:
முட்டை சாப்பிட வேண்டாம் என்று வைத்திருந்தேன் இப்போது நீங்கள் குறிப்பு போட்டு என் ஆசையை தூண்டி விட்டீர்கள்...ஹூம்ம்ம்ம்ம்
Avargal Unmaigal thanks...
Post a Comment