- மூளை - 2
- வெங்காயம் - 1
- இஞ்சிபூண்டுபேஸ்ட்-1 ஸ்பூன்
- தக்காளி-1
- மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்- 1/2 ஸ்பூன்
- தனியாதூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
- எண்ணெய் -5ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டுபேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.
- பின் அதில் நன்கு சுத்தம் செய்த மூளையை சேர்த்து வேகவிடவும்.பாதி வெந்ததும் மிளகுதூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- சிறு தீயில் வைத்து 2 ஸ்பூன்எண்ணெய் விட்டு நன்கு சுருள வறுக்கவும்.
- மூளைவறுவல் ரெடியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குறிப்பு:
குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.அவர்களுக்கு சாப்பிட எளிதாக இருக்கும்.
0 comments:
Post a Comment