skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள் :
- மட்டன் - 1/2 கிலோ
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
- வெங்காயம் - 1
- தக்காளி -1
- மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி - சிறிது
- கருவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- பட்டை - 2
- கிராம்பு - 2
- பிரிஞ்சி இலை - 2
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- மிளகுதூள் - 2 ஸ்பூன்
செய்முறை :
- குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை,சோம்பு சேர்த்து தாளிக்கவும்.பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து வதக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தனியா தூள் ,உப்பு சேர்த்து வதக்கி அதில் மட்டன் சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
- பின் குக்கரை மூடி 6 விசில் விடவும்.
- குக்கரை திறந்து பின் மிளகுதூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
மட்டன் மிளகு கிரேவி ரெடி.
0 comments:
Post a Comment