தேவையான பொருட்கள் :
- சாதம் - 1 1/2 கப்
- துவரம் பருப்பு - 3/4 கப்
- கத்தரிக்காய் - 1
- காரட் - 1
- முருங்கைகாய் - 1
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- க. மிளகாய் - 6
- கடுகு - 2 ஸ்பூன்
- கருவேப்பில்லை - சிறிது
- கொத்தமல்லி -சிறிது
- புளி- சிறிய உருண்டை
- நெய் - சிறிது
- உப்பு - 2 ஸ்பூன்
அரைக்க :
- வெந்தயம் - 1ஸ்பூன்
- மல்லி தூள் -1ஸ்பூன்
- மிளகாய் தூள் -1 1/2ஸ்பூன்
- துருவிய தேங்காய் -4ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- கிராம்பு -4
- கசகசா - 1ஸ்பூன்
- பட்டை - சிறிய துண்டு
செய்முறை :
- பிரஷர் கூகரில் அரிசி, பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம்,காய், எண்ணெய், 4 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில்விடவும்.
- ஒரு கடாய் வைத்து எண்ணெய் உற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, துருவிய தேங்காய், கசகசா, வெந்தயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.
- இன்னொரு கடாய் வைத்து 5 ஸ்பூன் எண்ணெய் உற்றி கடுகு, க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும் அத்துடன் வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, புளி சாரு மற்றும் அரைத்து வைத்த மசாலாவுடன் 2 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
- கொதித்ததும் வேகவைத்த அரிசி பருப்பு கலவை சேர்த்து கிளறவும்.
- நன்கு கிளறியதும் அதனுடன் நெய் சேர்த்து பரிமாறவும்.
- இதை உருளைகிழங்கு வறுவலுடன் சாபிட்டால் சூப்பர்.
2 comments:
எங்கள் வீட்டில் நிறைய காப்ஸிகம் சேர்க்கப் படும். கத்திரிக்காய் சேர்ப்பதில்லை. கத்திரிக்காய் சேர்த்தால் கிட்டத்தட்ட சாம்பார் சாதம் போன்ற பதமும் சுவையும் வந்து விடுகிறது. இதற்கு சைட் டிஷ்ஷாக அப்பளமும் வடகமும் செய்வார்கள்.
நான் சமைத்த போது ஒரு கத்திரிக்காய் சேர்த்தால் அப்படி ஒன்றும் மாற்றம் இல்லை. பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடவும். ஒவ்வொரு வீட்டில் விரும்புவது போல் சைட் டிஷ் செய்து சாப்பிடலாம். அப்பளம் காரம் இருக்காது, அதனால் உருளைக்கிழங்கு மெலிதாக வெட்டி உருளைக்கிழங்கு ரோச்ட்போல சமைதேன் நன்றாக இருந்தது.
Post a Comment