தேவையான பொருட்கள் :
- பரோட்டா -3
- முட்டை - 2
- வெங்காயம் -2
- தக்காளி -1
- கொத்தமல்லி - சிறிதளவு
- உப்பு -2 ஸ்பூன்
- எண்ணெய் -4 ஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
- தனியா தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
- பின் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அதில் கரம் மசாலா,மஞ்சள்தூள், மிளகாய் தூள்,தனியாதூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் முட்டை உடைத்து ஊற்றி கிளறவும்.
- முட்டை பாதி வெந்ததும் தொக்கு போன்ற பதத்தில் வெட்டி வைத்த பரோட்டா துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்.
- பின் கொத்தமல்லி தூவி சூடாக தயிர் ரைத்தாவுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment