தேவையான பொருட்கள் :
- ஆட்டுக்கால் - 6 கால்
- வெங்காயம் - 2
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- பச்சை மிளகாய் - 2
- தேங்காய் துருவல் - 6 ஸ்பூன்
- உப்பு - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
- ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு இஞ்சி பூண்டு விழுது சிறிது, மஞ்சள் தூள் சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 விசில் விடவும்.
- ஒரு கடாயில் கருவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன் நிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள்,தனியாதூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா, சீரக தூள் சேர்த்து வதக்கி அதில் வேக வைத்துள்ள மட்டன் கால் சேர்த்து கிளறவும்.
- அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- கொதித்ததும் மிளகு தூள் , கொத்தமல்லி சேர்த்து கிளறி ஆப்பம், தோசையுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment