தேவையான பொருட்கள் :
- பால் - 4 கப்
- லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
- சக்கரை - 3 கப்
- தண்ணீர் - 4 கப்
- ஏலக்காய் பவுடர் - 1/4 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்க விடவும்.
- நன்கு கொதிக்கும் போது அதில் லெமன் ஜூஸ் விட்டு திரியும் வரை கிளறவும்.
- நன்கு திரிந்ததும் அதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி தண்ணீர் ஈரும் வரை வைக்கவும். பின் அதில் இருந்து எடுக்கும் பன்னீர் நன்கு cold தண்ணீரில் அலசி அதை தண்ணீர் ஈரும் வரை வைக்கவும்.
- தண்ணீர் போனதும் அதை நன்கு சின்ன சின்ன உருண்டைகளாக செய்து வைக்கவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர்,ஏலக்காய் பவுடர் போட்டு கொதிக்க விடவும்.
- கொதிவந்ததும் அதில் செய்து வைத்து உள்ள பன்னீர் உருண்டைகளை போட்டு 15-20 நிமிடம் வேகவிடவும்.
- பின் ஆறவைத்து fridge ல் 4 மணி நேரம் வைத்து பரிமாறினால் சுவையான ரசகுலா ரெடி .
0 comments:
Post a Comment