Pages

வெங்காய சமோசா

குட்டீஸ் முதல் பெரியோர் வரை நம் கிட்செனில் வெங்காய சமோசா சமைத்தால். ரெடியா சமோசா சமைக்க, வாங்க போலாம் கிட்செனுக்கு.

தேவையான பொருட்கள்:
  1. மைதா மாவு - 1 கப்
  2. கோதுமைமாவு-1 கப்
  3. வெங்காயம்-1
  4. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
  5. உப்பு-1 ஸ்பூன்
  6. அவல் - 1/4 கப்
  7. எண்ணெய்- பொரிக்க
செய்முறை:
  1. முதலில் மைதாமாவு,கோதுமைமாவு,1/2 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல பிசையவும்.
  2. பின் அதை அரை மணி நேரம் ஊறவிடவும்.
  3. பாத்திரத்தில் மெலிதாக நீளவாக்கில் வெட்டிவைத்த வெங்காயம்,உப்பு, மிளகாய்த்தூள்,அவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.( அடுப்பில் வைத்து சமைக்க தேவையில்லை).
  4. பிசைந்து வைத்த மாவை எடுத்து நன்கு திரட்டி கொள்ளவும்.
  5. அதை சமோசா வடிவில் Cone போல செய்து அதன் உள்ளே மசாலாவை வைத்து மூடவும்.
  6. அனைத்தையும் சமோசா வடிவில்,உள்ளே மசாலா வைத்து ரெடி செய்து கொள்ளவும்.
  7. பின் கடாயில் எண்ணெய் வைத்து நன்கு சூடேறியதும் சமோசாவை போட்டு மிதமான தீயில் நன்கு சிவக்க பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:

அவல் சேர்ப்பதால் வெங்காயத்தில் இருந்து வரும் தண்ணீர் பதத்தை அது உறிஞ்சிகொள்ளும். ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் மைதா சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து, அதை சமோசாவை மசாலா வைத்து மூடும் போது பேஸ்ட் போல ஓரத்தில் தடவி ஒட்டவும்.அது சமோசா பிரிந்து வராமல் இருக்க உதவும்.

6 comments:

துளசி கோபால் said...

மாவு பிசையும்போது கொஞ்சம் எண்ணெய் சேர்த்துப்பிசைந்தால் சமோஸா க்ரிஸ்ப்பாக வரும்.

வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கினால் நல்லது.மாடரேஷன் இருக்கே!

விச்சு said...

டேஸ்டான சமோசா.

Priya said...

நன்றி விச்சு

Priya said...

நன்றி துளசி. நீங்கள் கூறியதை சேர்த்து விடுகிறேன்

arul said...

nice recipe

Priya said...

Thanks Arul

Post a Comment