தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 1
- தக்காளி-1
- கருவேப்பிலை- சிறிது
- உப்பு-1 ஸ்பூன்
- எண்ணெய்-5 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
வறுத்து அரைக்க:
- க.மிளகாய் - 6
- தனியா-1 ஸ்பூன்
- மிளகு -3/4 ஸ்பூன்
- பட்டை-2
- கிராம்பு -2
- சீரகம்-1/2 ஸ்பூன்
- சோம்பு-1/4 ஸ்பூன்
- இஞ்சி-சிறிது
- பூண்டு-பல்
செய்முறை:
- கடாயில் க.மிளகாய்,தனியா,மிளகு,பட்டை,கிராம்பு,சீரகம்,சோம்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.
- ஆறியதும் இஞ்சி,பூண்டு சேர்த்து மிக்ஸ்யில் நன்கு அரைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள்,உப்பு,அரைத்துவைத்த மசாலாவை சேர்த்து 1 நிமிடம் வதக்கி அதில் சுத்தம்செய்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
- சிக்கனை மூடிபோட்டு சிறுதீயில் வைத்து வேகவிடவும், சிக்கனில் இருந்தே தண்ணீர் வரும்.
- சிக்கன் நன்றாக வெந்ததும்மூடியை திறந்து தொக்கு போல வரும்வரை நன்றாக கிளறவும்.
- தொக்கு போல வந்ததும் கொத்தமல்லி தூவி கிளறினால் சுவையான செட்டிநாடு சிக்கன் தொக்கு ரெடி.
குறிப்பு:
பொதுவாக, சிக்கன் சமைக்க நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது. நல்லெண்ணெய் சிக்கன் சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல் ,அது உடல்சூட்டை தணிக்கும்.
2 comments:
உங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சமயமிருப்பின் பார்த்து கருத்துக் கூறவும். ந்ன்றி.
http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html
Yesterday I made it.. Super duper!
Post a Comment