ஹோட்டல் சுவைபோல வீட்டில் எளிதாக பனீர் பட்டர் மசாலா சமைக்கலாம் வாங்க
தேவையான பொருட்கள் :
செய்முறை:
தேவையான பொருட்கள் :
- பனீர் - 1 கப்
- பட்டர் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- வெங்காயம் -1
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- பால் - 1 கப்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- கசுரி மேத்தி - 1/4 ஸ்பூன்(காய்ந்த வெந்தயகீரை)
- தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை ,சிறிதாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
- பின் அரைத்து வைத்த தக்காளி போட்டு நன்கு வதக்கவும் .
- ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா , தக்காளி சாஸ், உப்பு கொஞ்சம் பால் சேர்த்து கட்டி படாமல் கலக்கவும்.
- தக்காளி போட்டு நன்கு வதங்கியதும் இந்த கலவையை அதில் போட்டு மீதமுள்ள பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.
- பின் அதில் பனீர், கசுரி மேத்தி போட்டு நன்கு கொதிக்கவிடவும். தேவைபட்டாள் சிறிது சிவப்பு கேசரி கலர் சேர்க்கவும்.
- இதை சூடான naan, சப்பாத்தி உடன் பரிமாறவும்.
4 comments:
பதிவை இணைத்தால் பரிசு...
பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
Thanks Krishy!!!
so.......!good...........!
Thanks
Post a Comment