Pages

வெந்தய கீரை பருப்பு கிரேவி

வெந்தய கீரைகள் சிறந்த செரிமானம் திறன்களை கொண்ட உணவு.நீங்கள் வெந்தய கீரை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகள் வராது.வெந்தய கீரை மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

தேவையான பொருட்கள்:
  1. வெந்தய கீரை - 1கட்டு
  2. துவரம்பருப்பு - 1/2 கப்
  3. சிறுபருப்பு - 1/4 கப்
  4. வெங்காயம்-1
  5. பூண்டு-5 பல்
  6. கடுகு-1/4 ஸ்பூன்
  7. உள்ளுதம்பருப்பு-1/4ஸ்பூன்
  8. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
  9. பச்சைமிளகாய்-2
  10. க.மிளகாய் - 2
  11. உப்பு-1 ஸ்பூன்
  12. பெருங்காயம் -சிறிது
  13. எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
  1. முதலில் பருப்பு,கீரை சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. அதை கூகேரில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி,மஞ்சள்தூள்,3பல்பூண்டு, நறுக்கிய பாதி வெங்காயம் ,பச்சைமிளகாய் ,பெருங்காயம்,1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 விசில்விடவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, க.மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  4. பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,தட்டி வைத்த பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. கூகர் சூடுஆறியதும் அதை எடுத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் லேசாக அரைத்து கொள்ளவும்.
  6. கடாயில் வெங்காயம் வதங்கியதும் அதை எடுத்து அரைத்து வைத்ததை சேர்த்து கலக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.


4 comments:

ப.கந்தசாமி said...

நல்ல உணவு. படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது.

விச்சு said...

நல்ல ஆரோக்கியமான உணவு...கீரைவகை எல்லாமே உடம்பிற்கு நல்லதுதான். விதவிதமாக செய்தால் அனைவருமே விரும்புவார்கள்.

Priya said...

நன்றி பழனி.கந்தசாமி சார்

Priya said...

நன்றி விச்சு சார்... கீரைவகை சமையல் பற்றி வரும் பதிவுகளில் எழுத முயல்கிறேன்.

Post a Comment