- கோஸ்-2 கப்
- வெங்காயம்-1
- கடுகு-1/4ஸ்பூன்
- உள்ளுதம்பருப்பு-1/2ஸ்பூன்
- கடலைபருப்பு-1/2ஸ்பூன்
- சீரகம்-1/4ஸ்பூன்
- முட்டை-2
- உப்பு-1/2ஸ்பூன்
- எண்ணெய்-2ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
- கருவேப்பிலை-சிறிது
வறுத்து அரைக்க:
- க.மிளகாய்-3
- உள்ளுதம்பருப்பு-1 ஸ்பூன்
செய்முறை:
- கடாயில் க.மிளகாய்,உள்ளுதம்பருப்பு சேர்த்து வறுத்து பொடித்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கோஸ் சேர்த்து வதக்கவும்.
- பாதி வெந்ததும் உப்பு,மஞ்சள்தூள்,பொடித்த பொடி சேர்த்து வதக்கவும்.
- அதில் முட்டை சேர்த்து வதக்கவும்.முட்டை நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.முட்டை கோஸ் பொடிமாஸ் ரெடி.
2 comments:
முட்டையும் கோஸும் நல்ல காம்பினேஷன். பார்க்கவும் நல்லாயிருக்கு. ஐய்!! நான்தான் பர்ஸ்ட்.
நன்றி விச்சு sir
Post a Comment