Pages

வடைகறி

தேவையான பொருட்கள்:

  1. கடலைபருப்பு-1 கப்
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  5. கருவேப்பிலை-சிறிது
  6. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  7. தனியாதூள்-3/4 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  9. உப்பு-3/4 ஸ்பூன்
  10. கொத்தமல்லி-சிறிது
  11. பட்டை-2
  12. கிராம்பு-2
  13. பிரியாணி இலை -2
  14. சோம்பு-1/4 ஸ்பூன்
  15. எண்ணெய் -4 ஸ்பூன்
செய்முறை:
  1. கடலைபருப்பு 3 மணி நேரம் ஊறவைத்து, கோர கோர வென தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
  2. பின் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி அதை இட்லி போல இட்லி தட்டில் வைத்து வேகவைத்து கொள்ளவும்.
  3. வெந்ததும் ஆறவைத்து உதிர்த்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  6. பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள், உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. 3 நிமிடம் கொதித்ததும் உதிர்த்து வைத்து உள்ள கடலைபருப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. கொதித்ததும் நறுக்கி வைத்த கொத்தமல்லி தூவி இட்லி, தோசை,சப்பாத்தியுடன் பரிமாறவும்.

2 comments:

துளசி கோபால் said...

இட்லித்தட்டில் வேக வைப்பதற்கு பதிலா சின்னச்சின்ன உருண்டையா உருட்டி மைக்ரோ அவனில் அஞ்சு நிமிஷம் வச்சு எடுக்கலாம்.

அந்தக் காலத்தில் பருப்பு உருண்டையை எண்ணெயில் பொரிச்சு எடுத்துக்குவாங்க.

இப்பதான் நமக்கு எண்ணெய் அதிகம் வேணாமுன்னு ஆகிப்போச்சே!

Priya said...

துளசி கோபால் நன்றி உங்கள் கருத்துக்கு...மைக்ரோ அவனில் வைத்தும் அவிக்கலாம், ஆனால் ஏனோ சிறிது ரப்பர் போல இருக்கு அதில் அவிக்கும் பொழுது. உங்களுக்கு எப்படி இருக்கிறது,ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா???

Post a Comment