தேவையான பொருட்கள்:
- பச்சரிசி -2 கப்
- பாசிபருப்பு -3/4 கப்
- இஞ்சி- சிறிது
- சீரகம் -1/2 ஸ்பூன்
- மிளகு -1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிது
- நெய்-3 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிது
- முந்தரி பருப்பு - 10
- அரிசியையும் பாசிபருப்பையும் நன்றாக அலசி குக்கரில் 5 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து 4 விசில் வர வரை வேகவைக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி அதில் சீரகம், மிளகு சேர்த்து கருவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும், பின்பு முந்தரி பருப்பு வதக்கவும்.
- பொங்கல் நன்றாக குலைந்து வந்து இருக்கும் அதனுடன் தாளித்தவற்றை சேர்த்து கிளறவும்.
- பொங்கல் ரெடி ..சாம்பார்,வடையுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment