தேவையான பொருட்கள் :
- துருவிய கேரட் - ஒரு கப்
- பச்சை மிளகாய் -3
- வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- வடித்தசாதம் - 3 கப்
செய்முறை :
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும்.
- அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் துருவிய கேரட்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- நன்கு வெந்ததும் சாதம்,கொத்தமல்லி தூவி கிளறவும்.
0 comments:
Post a Comment