skip to main |
skip to sidebar
- முட்டை - 4
- பாஸ்மதிஅரிசி-3 கப்
- பட்டை -2
- கிராம்பு -2
- பிரிஞ்சி இலை -2
- ஏலக்காய் -2
- பச்சை மிளகாய் -2
- பூண்டு - 10 பல்
- இஞ்சி - சிறிது
- வெங்காயம்-3
- புதினா - 1/4 கப்
- கொத்தமல்லி -1/4 கப்
- தக்காளி - 2
- எண்ணெய் - 6 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2ஸ்பூன்
- தனியா தூள் - 1ஸ்பூன்
- பிரியாணி மசாலா -2 ஸ்பூன்
- உப்பு - 2 ஸ்பூன்
- கேசரி கலர் பொடி - சிறிது
- நெய் - 2 ஸ்பூன்
செய்முறை
- முதலில் ஒரு பேனில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை மற்றும்ஏலக்காய் போட்டு வதக்கவும்.பின்பு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
- நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும், பின்பு அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.அதில் வெட்டிவைத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.
- பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் , பிரியாணி மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் வேகவைத்த முட்டை இரண்டு துண்டுகளாக போட்டு நன்கு கிளறவும். அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கிளறி வைக்கவும்.
- இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒருபட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை,ஏலக்காய், உப்பு ஒரு தேக்கரண்டி சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அதில் அரை மணி நேரம் உர வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும் அதை வடித்து கொள்ளவும்.
- கிளறி வைத்த முட்டை மசாலா மேல்வடித்த பாஸ்மதி அரிசியை போட்டு. கிளறாமல் அரிசி மேல் கேசரி கலர் பொடி அரை தேக்கரண்டி தண்ணீருடன் சேர்த்து ஊற்றி விடவும். அதன் மேல் நெய் ஊற்றி Aluminium Foil sheet போட்டு மூடி வைக்கவும்.
- அடுப்பில் ஒரு தவா வைத்து அதை நன்றாக சூடு செய்யவும், பின்பு அதன் மேல் அந்த பிரியாணி Pan வைத்து அடுப்பை சிம் செய்யவும். அரை மணி நேரம் களித்து மேலே கொத்தமல்லி இலை தூவி நன்கு கிளறி தயிர் பச்சடி, பிரியாணி கத்திரிக்காயுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment