தேவையான பொருட்கள்:
- ரவை - 2 கப்
- பச்சைமிளகாய் - 3
- வெங்காயம் -1
- கருவேப்பிலை -சிறிது
- கடுகு-1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைபருப்பு - 1 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- எண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு பொரிந்ததும் கருவேப்பில்லை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் உற்றி கொதிவந்ததும் உப்பு சேர்த்து ரவை போட்டு கிளறவும்.
- அடுப்பின் தீயை குறைத்து மூடிவைத்து வேகவிடவும். சூடான உப்புமா ரெடி.
குறிப்பு : உப்புமா உதிரியாக வேண்டும் என்றால் தண்ணீர் 1 கப் ஊற்றவும்.
1 comments:
உங்கள் செய்முறைபடி செய்தால் ஒன்று களி கிடைக்கும் அல்லது குழக்கட்டை கிடைக்கும்.
Post a Comment