தேவையான பொருட்கள்:
- இறால் - அரை கிலோ
- பூண்டு - 6 பல்
- பச்சை மிளகாய் - 2
- மிளகு தூள் - 2 ஸ்பூன்
- வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- மஞ்சள்தூள் - சிறிது
- எண்ணெய் - 4
- உப்பு -1/2 ஸ்பூன்
செய்முறை:
- எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தீயை குறைத்து சிவக்கும் வரை வறுக்கவும். சில்லி இறால் வறுவல் ரெடி.