- பாஸ்மதிசாதம் - 2 கப் (உதிரியாக)
- வெங்காயம் - 1
- கேரட் - 1
- பீன்ஸ் - 5
- முட்டை - 2
- முட்டைகோஸ் - 1/2 கப்
- சோயா சாஸ் - 1 ஸ்பூன்
- தக்காளி சாஸ் -1 ஸ்பூன்
- மல்லி இலை - சிறிது
- பச்சை மிளகாய் - 2
- பச்சை பட்டாணி - 1/4 கப்
- எண்ணெய் - 3ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- மிளகுதூள்- 1 ஸ்பூன்
- வெங்காயம்,கேரட்,முட்டைகோஸ்,பீன்ஸை சிறிதாக அல்லது நீளவாக்கில் வெட்டவும்.மிளகாயை சிறியதாக வெட்டவும்.
- முட்டையை ஒரு கப்பில் கலக்கி வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மிளகாயை போட்டு லேசாக வதக்கவும்.
- அதனுடன் கேரட்,முட்டைகோஸ் மற்றும் பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் அளவு வதக்கவும்.
- வதங்கியதும் அதை ஒரு ஓரமாக கடாயில் ஒதுக்கிவிட்டு முட்டையை ஊற்றவும்.
- முட்டை வெந்தபின் அதை கொத்திவிட்டு அதில் பட்டாணி,கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- பின்பு அதில் தக்காளிசாஸ்,சோயா சாஸ்,உப்பு சேர்த்து கலக்கவும்.இதில் உதிரியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு மிளகுதூள் தூவி பிரட்டி எடுக்கவும்.சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி.
குறிப்பு :
சிக்கன்ஃப்ரைட் ரைஸ் அல்லது இறால்ஃப்ரைட்ரைஸ் வேண்டுமென்றால் அதில் சிக்கன் அல்லது இறால் துண்டுகளை பொரித்து சேர்த்து கிளறவும்.
சிக்கன்ஃப்ரைட் ரைஸ் அல்லது இறால்ஃப்ரைட்ரைஸ் வேண்டுமென்றால் அதில் சிக்கன் அல்லது இறால் துண்டுகளை பொரித்து சேர்த்து கிளறவும்.
2 comments:
Akka.. Tried egg fried rice.. super ka...
Is ter a recipe for Keerai (spinach).. something pls?
Thank you da...
Venthaya keeraiku pottu erukean
matha keeraithu eluthurean ma..
Post a Comment