Pages

கோவக்காய் வறுவல்

தேவையான பொருட்கள் :
  1. கோவக்காய் - 1/4 கிலோ
  2. வெங்காயம் - 1
  3. பூண்டு - 3 பல்
  4. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  6. தனியா தூள் - 1/2 ஸ்பூன்
  7. எண்ணெய் - 2 ஸ்பூன்
  8. உப்பு - 1 ஸ்பூன்
  9. கடுகு - 1/4 ஸ்பூன்
  10. கருவேப்பிலை - சிறிது
  11. மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை :

  1. கோவக்காய், வெங்காயம் சிறிதாக வெட்டிவைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு ,கருவேப்பில்லை போட்டு பொரிந்ததும் அதில் வெட்டிவைத்த வெங்காயம், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் அதில் கோவக்காய் சேர்த்து நன்கு வதக்கவும், பாதி வெந்ததும் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின் சிறு தீயில் மூடி போட்டு வேகவிடவும்.
  4. வெந்ததும் மிளகு தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்.

0 comments:

Post a Comment