skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள் :
- உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
- கடுகு - 1 ஸ்பூன்
- உள்ளுதம் பருப்பு - 1/4 ஸ்பூன்
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- பூண்டு - 6 பல்
- இஞ்சி - சிறிது
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- தனியாதூள் - 1 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
- உப்பு - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை :
- உருளைக்கிழங்கை வேகவைத்து நறுக்கி வைக்கவும்.
- பூண்டு, இஞ்சி, சோம்பு அரைத்து வைக்கவும்.
- கடாயில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உள்ளுதம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு, சோம்பு போட்டு வதக்கவும்.
- பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.
- உருளைக்கிழங்கு நன்கு சிறு தீயில் வைத்து வறுக்கவும்.
- சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.
0 comments:
Post a Comment