தேவையான பொருட்கள் :
- அவரைக்காய் - 1/4 கிலோ
- வெங்காயம் - 1
- மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
- தனியாதூள் - 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
- பூண்டு - 3 பல்
- கருவேப்பிலை - சிறிது
- உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை :
- அவரைக்காய், வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும் கருவேப்பிலை,வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அவரைக்காய் ,உப்பு சேர்த்து வதக்கி,பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தனியா தூள் சேர்த்து வதக்கி தீயை குறைத்து மூடி வேகவைக்கவும்.
- வெந்ததும் சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி.
0 comments:
Post a Comment