- மைதா -1 கப்
- கோதுமைமாவு-1/4கப்
- மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
- உப்பு-சிறிது
- நெய்-6 ஸ்பூன்
பூரணம் செய்ய:
- கடலைபருப்பு-1கப்
- வெல்லம்-1/2கப்
- ஏலக்காய்-2
செய்முறை:
- மைதா,கோதுமைமாவு,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவும். பின் அதை 30 நிமிடம் ஊறவிடவும்.
- கூகேரில் கடலைபருப்பு 2 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விடவும்.
- தண்ணீர் முழுதும் வடித்து கடலைபருப்பு,வெள்ளம்,ஏலக்காய் சேர்த்து மிக்ஸ்யில் ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக அரைக்கவும்.
- ஒரு கவரில் நெய் தடவி பிசைந்து வைத்து உள்ள மாவில் ஒரு உருண்டை எடுத்து சிறியதாக தட்டி கொள்ளவும்.
- பின் அதன் நடுவில் பூரணத்தை வைத்து நன்கு மூடி உருண்டையாக செய்து கொள்ளவும்.
- பின் கையில் நெய் தடவி நன்கு மெலிதாக வரும் வரை தட்டி கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் செய்து வைத்துள்ள போளி போட்டு சிறிது நெய் ஊற்றி ரெண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
0 comments:
Post a Comment