தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு-1 கப்
- கடலை பருப்பு-1/2 கப்
- க.மிளகாய்-8
- பெருங்காயம்-1/4 ஸ்பூன்
- மிளகு-1 ஸ்பூன்
- உப்பு-1 ஸ்பூன்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் துவரம் பருப்பு போட்டு பொன் நிறமாக வறுக்கவும்.
- பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து கொண்டு அதே கடாயில் கடலைபருப்பு,க.மிளகாய்,மிளகு சேர்த்து வறுத்து கொள்ளவும்.
- நன்கு ஆறியதும் மிக்ஸ்யில் போட்டு அத்துடன் பெருங்காயம்,உப்பு அரைத்து கொள்ளவும். பருப்பு பொடி ரெடி இதை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவும்.
0 comments:
Post a Comment