தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி - 2 கப்
- தேங்காய் - 1/2 கப்
- உப்பு -3/4 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கடலைபருப்பு-1/2 ஸ்பூன்
- க.மிளகாய்-5
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கருவேப்பிலை-சிறிது
- கொத்தமல்லி-சிறிது
செய்முறை:
- அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து க்ரைண்டரில் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு,க.மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
- பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த தேங்காய்,கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
- மிதமான சூட்டில் மாவை ஒன்றாக சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
- சுவையான உப்பு உருண்டை தயார்.
0 comments:
Post a Comment