தேவையான பொருட்கள்:
- ப்ராக்கலி - 2 கப்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
- பூண்டு - 3 பல்
- பச்சை மிளகாய் - 2
- பொட்டுகடலை மாவு - 1/2 கப்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
- சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்
- தனியாதூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- முதலில் ப்ராக்கலியை சிறிய பூக்களாக நறுக்கி தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்து விடவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பெருங்காயத்தூள் போட்டு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
- வதங்கியதும் ப்ராக்கலியை போட்டு நன்கு வதக்கி பாதி வேகவிடவும்.
- ஒரு பாத்திரத்தில் மசாலா தயாரிக்க கொடுத்த பொருள்களை போட்டு 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு ஸ்பூனை வைத்து கிளறவும்.
- பின் மசாலாக் கலவையை ப்ராக்கலி மீது தூவி விடவும்.நன்கு கிளறி 5 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.பின் கிளறி மொரு மொருவென ஆகும் வரை நன்கு வறுக்கவும்.
- சுவையான ப்ராக்கலி வறுவல் தயார்.
0 comments:
Post a Comment